இராணுவத்தின் 73வது ஆண்டு விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மத சடங்குகள்!

Date:

இராணுவத்தின் 73ஆவது ஆண்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு  இஸ்லாமிய சமய நிகழ்வு நேற்று (26) கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் ஆசி பெறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் படைத் தளபதி, பிரதிப் படைத் தலைவர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவு சார்ஜன்ட் மேஜர்கள் மற்றும் ஏனைய அணிகள் கலந்துகொண்டனர்.

இராணுவக் கொடி, தொண்டர் படைக் கொடி உட்பட அனைத்து இராணுவப் படைப்பிரிவுகள், பாதுகாப்புப் படைத் தலைமையகம், பயிற்சி கல்லூரி பிரிவுகள், படைப்பிரிவுகள் மற்றும் அலகுக் கொடிகள் வழிபாடு செய்யப்பட்டு இராணுவத்தினருக்கு மத ஆசீர்வாதங்களும் இடம்பெற்றன.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...