தீ விபத்து குறித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை!

Date:

மோதர, மாதம்பிட்டிய, கஜீமா தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பு மாவட்ட ஆளுநர் தலைமையில் குழுவொன்றை நியமித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ​நேற்று (28) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தோட்ட வீடுகள் தொடர்ச்சியாக தீப்பிடித்து வருவதாகவும் கடந்த ஒன்றரை வருடங்களில் மூன்று தடவைகள் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்றறது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது, இந்த தோட்டங்கள் தொடர்ந்து தீயில் சிக்கி வருகின்றன. கடந்த ஒன்றரை வருடத்தில் மூன்று முறை தீப்பிடித்தது. எனவே இந்தத் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணை நடத்துவோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகு முறையான திட்டத்தை செயல்படுத்துவோம்.

இந்தத் தோட்டத்தில் வசிப்பவர்களிடம் வீடுகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காண்போம். இவர்களில் சிலர் பதுளையில் குடியேறியவர்கள். அவ்வாறானவர்களுக்கு அந்தப் பிரதேசங்களில் வீடுகளை வழங்குவோம். இல்லையெனில் இது பெரிய பிரச்சினையாகி விடும். அரசு பணத்தில் வீடுகளைக் கட்ட முடியாது. இந்த தீ விபத்து குறித்து முறையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்வோம்.

பிரதமர் தினேஷ் குணவர்தன கூறியதாவது, இந்த வீடுகள் கடந்த வருடமும் எரிக்கப்பட்டன. சில நேரங்களில் இவை தீப்பிடித்து எரிகின்றன. தற்காலிகக் குடியிருப்பாளர்களை அங்கிருந்து அகற்ற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

கொழும்பு மாவட்ட ஆளுனர் பிரதீப் யசரத்ன இங்கு கூறியதாவது – மோதர, கஜீமா தோட்டத்தில் உள்ள வீடுகளில் வரிசையாக தீ பரவியமை தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது அதன் இடைநிலை முகாமாக நகர அபிவிரத்தி அதிகார சபை இயங்கி வருகின்றது.

இந்த தோட்டத்தில் தற்போது 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1000 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் பெரும்பாலானோர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். எனினும் இந்தத் தீயினால் 60 வீடுகள் முழுமையாகவும் 11 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 306 பேர் தீயினால் இடம் பெயர்ந்துள்ளனர்.

தற்போது இடம்பெயர்ந்த அனைவரும் மோதர உயன சன சமூக மண்டபம் மற்றும் களனி நதி ஆலயத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கம் உணவு மற்றும் பானங்களை வழங்குவதுடன், சர்வோதய நிறுவனத்தின் தலையீட்டுடன், இடம் பெயர்ந்த குழந்தைகளுக்கும் பள்ளி உடைகள், காலணிகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...