T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்!

Date:

T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு ஓய்வளிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.

இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும், தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பும்ரா விலகியது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...