கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

Date:

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த அமர்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்களை தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுக்களின் உறுப்பினர்களை நாடாளுமன்ற தெரிவுக்குழு பெயரிட்டிருந்ததுடன், அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் சபையில் அறிவித்தார்.

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத்தை, புதிய கோப் குழுவில் உறுப்பினராக நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று யோசனை முன்வைத்தார்.

குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கோப் குழுவில் இருந்து விலகுவதற்கு சுயாதீன தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...