பாடசாலை முடிந்ததும் மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு!

Date:

பாடசாலைக் கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு ஜப்பானில் நான்கு வருட தொழில்நுட்பப் பயிற்சி வழங்குவதற்கான அடிப்படை ஒப்பந்தம்,  தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜப்பானின் Gojo நகர மேயர் Yoshinori Ohta ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார, மேயர்  Nagaye, பிரதம நிறைவேற்று அதிகாரி Noriyuki Minami, Iwao Horii, ஜப்பானிய பாராளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுகள் பிரிவின் பணிப்பாளர் Iwase Kiichiro, பிரதிப் பணிப்பாளர் Iwase Kiichiro உள்ளிட்ட ஜப்பானிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

வெளிவிவகார அமைச்சு, மற்றும் ஜப்பான் இலங்கை நட்புறவு சங்கத்தின் கவாய் ஹிரோமி ஆகியோருக்கு தேவையான அடிப்படை இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தை சகோதர நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், ஜப்பான்-இலங்கை இருதரப்பு உறவுகளின் 70 ஆண்டு நிறைவை ஒட்டி இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர், இளைஞர்கள் ஜப்பானுக்கு வந்து விவசாயத் துறையில் நான்கு வருட பட்டப்படிப்புடன் பயிற்சி பெற்று, ஜப்பானில் வீடுகளில் வசிக்கும் வாய்ப்பும், உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கலாசார பரிமாற்றத்திற்கும் வழிவகுக்கும்.

குறிப்பாக நவீன விவசாய தொழில்நுட்பத்தில் மேலதிக பயிற்சிகளை பெறுவதற்கு அங்கு  வாய்ப்பு கிடைக்கும்.

இந்த மாணவர் பரிமாற்றத் திட்டத்தை ஆரம்பிக்கும் முன், Gojo நகரப் பாடசாலைகள் இணையம் மூலம் காலி மாவட்டப் பாடசாலைகளுடன் இணைத்து பரிமாற்றத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன.

மேலும், இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகள் தொடர்பாக ஜப்பானிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, வேளாண் செயலாக்க தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து ஜப்பான் கவாய் பல்கலைக்கழகம் அமைச்சரிடம் சிறப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஜப்பானிய மொழியை பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மனிதவள அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகளிடமிருந்து நம்பிக்கையான பதில் கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...