சில திணைக்களங்கள் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு வர்த்தமானி வெளியீடு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் வரம்புகளை மீளாய்வு செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,  தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு என்பன ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்படும்.

முன்னதாக, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தொழில்நுட்ப அமைச்சின் கீழும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழும் இருந்தது.

அத்தோடு, தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை முன்பு பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இருந்த கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கைத்தொழில் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...