தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் இன்று (அக்-6) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்தனர்.
தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறந்தவர்களில் குழந்தைகள் மற்றும் முதியோர்களும் அடக்கம் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற நாடுகளை காட்டிலும் தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அங்கு துப்பாக்கிச்சூடு என்பது அரிதான ஒன்றாக இருந்து வந்த நிலையில், இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் உயிரிழந்தது, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடக்கும் போது, அங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். மதிய நேரத்தில் அங்கு வந்த முன்னாள் பொலிஸ் , ஆசிரியை உள்ளிட்ட சில ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் உயிரிழந்த ஆசிரியை 8 மாத கர்ப்பிணி ஆவார்.