அந்நிய செலாவணி பற்றாக்குறையால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகிறது!

Date:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மூன்றாவது கச்சா எண்ணெய் கப்பலின் கையிருப்பை இறக்க முடியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்திற்கு வாராந்தம் மத்திய வங்கி வழங்கிய பணத்தை பயன்படுத்தி, கடந்த காலங்களில் தட்டுப்பாடு இன்றி பராமரித்து எரிபொருளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...