6 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச!

Date:

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு தற்போது 395 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலை, தற்போது 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் சிகப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பு தற்போது 398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பா 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும்  இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசி,  வெள்ளை நாட்டரிசி, வெள்ளை சீனி,  ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...