அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்பம்!

Date:

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2022 ஆரம்ப நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வு கலாநிதி ஹனிபா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஜனாப் ரீ.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் எஸ்.நவநீதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று புத்தகக் காட்சி   (07) வெள்ளிக்கிழமை மாலை முதல் 6 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பல்வேறு நூல்களின் அறிமுகம், ஒரு சில நூல் வெளியீடுகள் ஆகியன இடம்பெற்றன.

நூல் விற்பனை காலை 9.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறும்.

வருடாந்தம் பிரம்மாண்டமாக இடம்பெற்று வரும் அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில் பெரியோர் முதல் சிறியோர் வரையான அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகங்களையும் காகிதாதிகளையும் கொள்வனவு செய்யலாம்.

அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள Meerasahib Square மற்றும் Zain Plaza காட்சியறையில் இது இடம்பெறுகின்றது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...