ரணில் விக்கிரமசிங்க தற்போது எம்முடன் இருக்கிறார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, முதலில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டினாலும் இப்போது திட்ட மாட்டோம் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தற்போது அவர் சரியான நபராகி விட்டார் என தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
எனவே இப்போது ரணிலுக்கு நல்லது சொல்கிறோம். ஏனென்றால் அவர் இப்போது சரியான பாதையில் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு உறுதுணையாக இந்தப் பயணத்தைத் தொடர நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.