தாய்ப் பாலில் பிளாஸ்டிக் விஷம் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அச்சம்!

Date:

தாயின் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அஞ்சுகிறது.

தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தாய்மார்களும் ஒரு வாரத்திற்கு முன் குழந்தை பெற்ற தாய்மார்கள் என்றும் இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.

உயிரினங்களின் உடலில் பிளாஸ்டிக் விஷம் இருப்பது ஒரு பயங்கரமான நிலைமை அவை செல்களை பாதிக்கின்றன. புற்றுநோயை உண்டாக்கும். தாயின் பாலில் பிளாஸ்டிக் விஷம் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை என ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மைக்ரோ-பிளாஸ்டிக் என்பது 5 மி.மீக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள். தற்போது பிளாஸ்டிக் விஷங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டன.

மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் முதலில் கடல் உயிரினங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் அடிக்கடி கொட்டப்படுவதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் விஞ்ஞானிகள் நிலத்தில் வாழும் உயிரினங்களின் உடலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகளை கண்டுபிடித்தனர்.

தாயின் பாலில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் இருப்பதை உறுதிசெய்துள்ளதன் மூலம், மனித உடலிலும் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பதைக் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...