நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு!

Date:

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மேலும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவின்மை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவின்மையே இந்த நிலைக்கு முக்கியக் காரணம் என போஷாக்குக்கான விசேட செயலணியின் உறுப்பினர் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

அந்த நிலையைத் தவிர்ப்பதற்காக அதிக ஆபத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏற்கனவே ஒரு முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி ஜீ.விஜேசூரிய இங்கு தெரிவித்தார்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என வைத்தியர் தெரிவித்தார்.

மேலும், தற்போது நாட்டில் மந்தபோஷண நிலைமை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், ஒரு குடும்பத்தில் தாய்,தந்தை, ஒரு பிள்ளை இருப்பார்களாயின் அவர்கள் நாளொன்றுக்கு வழங்கப்படும் உணவின் அளவு, எவ்வாறான உணவுகள் வழங்கப்படவேண்டும், அந்த உணவிற்காக வாரத்திற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றது என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

மேலும், கண்டி, மாத்தறை, நுவரெலியா போன்ற மாவட்டங்களை முதலில் தேர்ந்தெடுத்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டினை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்காக வேறு தனியார் குழுக்களைசேர்த்து முன்னெடுத்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...