இந்தியாவின் சர்ச்சைக்குரிய இருமல் மருந்துகளின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த உத்தரவு!

Date:

இந்தியாவின் சர்ச்சைக்குரிய இருமல் மருந்தின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து துறை குழுக்கள் இணைந்து நடத்திய விசாரணையில், மருந்து தயாரிப்பில் 12 குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக மாநில அரசு ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து காரணமாக காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததாக செய்திகள் வெளிவந்தபோது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில்,

“இந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...