நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெறவிருந்த கூட்டத்துக்கு வருகைத்தந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘ஒன்றாக எழுவோம்’ எனும் தெரிப்பொருளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெறுகின்றது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.
அதன்படி கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று முற்பகல் மகிந்த நாவலப்பிட்டிக்கு சென்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள், உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.