அனைவரையும் ஒன்றிணைத்த கஹட்டோவிட்ட ‘MLSC’ இன் மீலாத் நிகழ்வுகள்!

Date:

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC)  நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தின நிகழ்வுகள் அண்மையில் அதன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் MLSC நிறுவனம் மற்றும் சியன ஊடக வட்டம் ஆகியவற்றின் தலைவரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்றன.

ஆரம்ப நிகழ்வாக முதல் முஸ்லிம் பரீட்சை ஆணையாளர் கஹட்டோவிட்ட  மர்ஹூம்  ஏ.எம்.முஸ்தகீம் நினைவரங்கமாக பிரதேச பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப்போட்டி இடம்பெற்றது.

இதன்போது கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகாவித்தியாலயம், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலம் மற்றும் உடுகொட அறபா மகா வித்தியாலயம் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்டன.

அதனை தொடர்ந்து பேச்சுப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.எம்.ஸாபித்தின் பேச்சு இடம்பெற்றதுடன், அவருக்கான பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

ஆதனைத் தொடர்ந்து கலாநிதி ரவூப் ஸெய்ன் தலைமையில் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது.

இரண்டாவது கட்ட நிகழ்வாக மர்ஹூம் நாஸிர் லெப்பை நினைவரங்கமாக மௌலவி அல்ஹாஜ் இஜ்லான் காஸிமி தலைமையில் மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.

அதனையடுத்து மூன்றாவது கட்ட நிகழ்வாக மர்ஹூம் ஷாபி சேர் நினைவரங்கமாக கவிஞர் கிண்ணியா அமீர் அலி தலைமையில் மீலாத் கவியரங்கம் இடம்பெற்றது.

நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன தலைவர் அல்ஹாஜ் இல்யாஸ் கரீம் சார்பில் அவருடைய புதல்வர் அல்ஹாஜ் இர்பான் கரீம் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக சிகாமணி ஆமினா முஸ்தபா (தேசிய தலைவர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், கொழும்பு) கலந்து கொண்டார்.

இதேவேளை ஏனைய அதிதிகளாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அல்ஹாஜ் எம்.டி.எம்.இக்பால், முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினருமான எம்.எம்.மொஹமட், முன்னாள் உதவி பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.மொஹமட் மற்றும் MLSC அங்கத்தவர்கள், உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச தக்கியாக்கள், ஸாவியாக்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ரிஹ்மி ஹக்கீம்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...