இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்!

Date:

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் நாவலாசிரியரும் இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார்.

1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக அவர் திகழ்ந்தார்.

சந்தனசாமி ஜோசப், 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி பதுளை மாவட்டம், ஹாலி-எல நகருக்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார்.

தெளிவத்தை ஜோசப் தமிழ்நாட்டில் கும்பகோணத்தின் உயர்நிலைப் பள்ளியில் கற்றதன் பின்னர், இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

ஈழத்தின் சிறுகதையாளரும்  நாவலாசிரியரும்  இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராவார்.

தமது படைப்புக்களுக்காக அவருக்கு சாகித்திய விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2013) சாகித்திய ரத்னா (2014) போன்ற விருதுகள் கிடைத்துள்ளன. காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவலாகும்.

நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது அவருக்கு கிடைத்தது.

இவரது குடை நிழல் என்ற புதின நூல், 2010 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவையின் விருதைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...