இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
அதன்படி, கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால், அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரிகளுக்கு ஒரு கிலோ மாவை கொள்வனவு செய்வதற்கு சுமார் முந்நூறு ரூபா செலவாகும் என ஜயவர்தன தெரிவித்தார்.
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இப்போதே அறிவிக்க முடியாது எனவும் எதிர்காலத்தில் அது அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.