நாட்டின் நிலைமைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

Date:

நாட்டின் பொருளாதாரம் உட்பட நாட்டின் நிலை குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த பிரேரணை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை விவாதம் நடைபெறும்.

அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை கேள்வி கேட்கும் அமர்வு நடைபெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (27) முற்பகல் 11.00 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது.

இதேவேளை, வரிச் சட்டமூலங்கள் மீதான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்தேகம சமித்த தேரர், டி.பி.ஏக்கநாயக்க, சந்திரகுமார விஜேகுணவர்தன, மற்றும் எஸ். மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்னசிங்கம் அவர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி இரங்கல் விவாதம் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...