ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரிடா முதல் பெர்குயன் பகுதி வரை ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அல்புலா/பெர்னினா ரயில் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 2008இல் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடம் ஆகும்.
இந்த சிறப்பு ரயிலில் பயணிப்பதன் மூலம் உலகின் மிக அழகான ரயில் பாதையையும் கண்டு மகிழலாம்.
உலகின் மிக நீளமான ரயில் என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. இந்த ரயிலில் 4550 இருக்கைகள் உள்ளன, ஒரே நேரத்தில் 7 ஓட்டுநர்களால் மிகுந்த ஒருங்கிணைப்புடன் இயக்கப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், சுவிட்சர்லாந்து தற்போது உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் நாடாக மாறியுள்ளது.
சுவிஸ் ரயில்வேயுடன் இணைந்த ரேடியன் ரயில்வே நிறுவனம், 100 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலை சுமார் 2 கிலோமீட்டர் நீளம் இயக்கியது. Ratian Railway மூலம் இந்த உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது
The Rhaetian Railway RhB நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த ரயில், 22 சுரங்கங்கள் மற்றும் 48 பாலங்கள் வழியாக செல்கிறது. இந்த ரயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய ஆல்புலா / பெர்னினா பாதையில் செல்கிறது.
இந்த ரயில் பாதையில் இயங்கும் அனைத்து சேவைகளின் செயல்பாடும் கொரோனா தொற்றுநோய் காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ரயில்வேயின் வருவாயிலும் மோசமான விளைவை ஏற்படுத்தியது.
இந்த ரயிலின் மூலம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இந்தப் பாதையில் ரயில் பயணத்தை ரசிக்கத் திரும்புவார்கள் என்று ரயில்வே நிறுவன அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து ரயில்வேயின் 175ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த வழித்தடத்தில் உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.