இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் வைத்தியசாலையில்!

Date:

அதிவேகமாக ஓடிய இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (நவம்பர் 2) காலை 7.30 மணியளவில்  நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் அடங்குகிறார்.

குறித்த வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறும் வளைவு ஒன்றிற்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டு பேரூந்துகளும் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இருந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...