மேலதிக எரிபொருள் ஒதுக்கத்துக்காக 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு!

Date:

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் மேலதிகமாக ஐந்து லீற்றர் எரிபொருள் ஒதுக்கத்தை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை 7,675 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த பதிவு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மேல்மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முச்சக்கர வண்டி பணியகத்தின் பிரதானி ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை 5 லீற்றர் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கம் இந்த பதிவு நடவடிக்கை ஊடாக 10 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டம் விரைவில் ஏனைய மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...