சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு செல்வது இடைநிறுத்தம்!

Date:

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்கள், தொழில் கிடைக்காமல் துன்புறுத்தலுக்கு ஆளானமை, சிறைத்தண்டனை அனுபவித்தமை மற்றும் காணாமல் போனமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வெளியான தகவல்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி, துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு சுற்றுலா விசா மூலம் பெண்களை பணியமர்த்துவதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் மூலம் உள்நாட்டு மற்றும் திறமையற்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களை பதிவு செய்வதற்கான அனுமதியும் விசேட அறிவுறுத்தலின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...