ஆசிரியர்களின் ஆடை சுதந்திரத்தால் நாட்டின் கலாசாரம் சீர்கெடாது: ஜோசப் ஸ்டாலின்

Date:

எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாசாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் விடுத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடையை மாற்றலாம், ஆனால் துறவறம் பூண்டவர்கள் தங்களது ஆடைகளை மாற்ற முடியாது என்பதால், இந்த கோரிக்கையை அந்நியப்படுத்த வேண்டாம் என்று ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

புடவை மற்றும் ஒசரி சாரி அணிய சிரமப்படும் ஆசிரியர்களுக்காகவே நாம் இலகுவான ஆடைகளை கோருகிறோம். இது அனைத்து ஆசிரியர்களினது உடைகளையும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை இல்லை.

இந்த கோரிக்கை தவறானது என மகா சங்கத்தினர் எதிர்கின்றனர். கல்வித்துறையில் உள்ள 247,000 ஆசிரியர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்களே உள்ளனர்.

புடவையை அறிமுகப்படுத்திய இந்தியாவில் கூட புடவை தவிர்ந்த ஏனைய ஆடைகளை அணியும் ஆசிரியர்களும் உள்ளனர்.

கல்வியில் சிறந்த நாடாகவுள்ள பின்லாந்தில் கூட இவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை. சில பிக்குமார் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, குளிரிலிருந்து பாதுகாப்புபெற வேறு ஆடைகளை அணிகின்றனர். இதனை பிக்குமாரை அவமதிப்பதற்காக கூறவில்லை.

ஆசிரியர்களுக்கு ஆடை சுதந்திரம் அளிப்பதால் மகாசங்கத்தினர் குறிப்பிடுவது போன்று கலாசாரம் எந்த வகையிலும் அழிக்கப்படாது. வளர்ந்து வரும் சமூகத்தில் இவ்வாறான தடைகளை ஏற்படுத்துவது பொருத்தமற்றது. எனவே, ஆடை தொடர்பான விடயங்களில் கல்வியமைச்சர் தலையிட்டு தீர்வொன்றை வழங்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...