காலநிலை மாற்றம் தொடர்பான (27th Conference of the Parties of the UNFCCC) மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (ஞாயிற்றுக்கிழமை ) எகிப்திற்கு பயணமாகவுள்ளார்.
மேலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பிரதான நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பான விவாதிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாநாடு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.