ஷார்ஜாவில் நடைபெற்ற தமிமுன் அன்சாரியின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா!

Date:

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” என்ற கவிதை நூல் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
அங்கு நடைபெற்ற அரங்க நிகழ்வில் இந்நூலை தமிழ் மையம் தலைவர் ஜெகத் கஸ்பர் வெளியிட, தொழிலதிபர் சுல்தானுல் ஆரிப் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

ம.ஜ.க இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி,  வானொலி அறிவிப்பாளர் அரூன், அதீப் குழும தலைவர் டாக்டர் அன்சாரி, அபுதாபி சாகுல் ஆகியோர் அடுத்தடுத்த பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

அரங்கில் பங்கேற்றவர்களுக்கு மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நூலில் கையெழுத்திட்டு வழங்கினார்.
இந்நிகழ்வில் ம.ஜ.க நண்பர்கள் முன் முயற்சியில் மனிதநேய கலாசாரப் பேரவை சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘அன்பை விதைப்போம்’ என்ற பாடல் ஒலி-ஒளிப் பேழையும் வெளியிடப்பட்டது.

தோப்புத்துறை ரியாஸ் அவர்களின் ஆக்கத்தில் வெளியிடப்பட்ட இதனை மு.தமிமுன் அன்சாரி வெளியிட, டெபா குழும தலைவர் பால் பிரபாகரன், சமூக ஆர்வலர் பொன் மைதீன் பிச்சை, இந்திய சமூக மைய தலைவர் அல்அய்ன் முஸ்தபா முபாரக், ஷார்ஜா தொலைக்காட்சியின் கிராபிக்ஸ் தலைமை அதிகாரி சிராஜ், ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வுக்கு டாக்டர் ஏ.அசாலி அகமது தலைமை தாங்கினார். மதுக்கூர் அப்துல் காதர் வரவேற்புரையாற்றினார்.

மனிதநேய கலாசாரப் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், அபுல் ஹஸன், ஜியாவுல் ஹக், அப்துல் ரெஜாக், பயாஸ், ரசூல், ஹக்கீம், சாகுல், கீழக்கரை செய்யது இப்ராஹிம் ஆகியோருடன், ம.ஜ.க மாநில துணைச் செயலாளர் அஸாருதீன், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன், கோவை மாநகர ம.ஜ.க செயலாளர் அப்பாஸ், கோவை மாநகர மாவட்ட துணைச் செயலாளர் சிங்கை சுலைமான் ஆகியோரும் அரங்கப் பணிகளை ஒருங்கிணைத்தனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...