இன்று கிங்தோட்டை, ஜின் கங்கை அருகில் கடலில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவின்ன அரபிக் பாடசாலையில் கல்வி கற்கும் காலி ஹிரிம்புரையைச் சேர்ந்த மொஹமட் மொஹமட் யூசுப் (வயது 14) மற்றும் காலி மொரகொடையைச் சேர்ந்த மொஹமட் மில்ஷான் (15) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் படிக்கும் அரபு பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், இரண்டு மாணவர்களும் கிங்தோட்டை அருகேயுள்ள கடலுக்கு வந்துள்ளனர்.
அவ்வாறு நீந்திக் கொண்டிருந்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து, அரை மணி நேரம் தேடி சடலத்தை அப்பகுதி மக்கள் இணைந்து கரைக்கு எடுத்து வந்தனர்.
அதற்குள் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததுடன் மற்றைய மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.