எங்களை மீண்டும் நாட்டு திருப்பி அனுப்ப வேண்டாம்: வியட்நாமில் உள்ள இலங்கை அகதிகள் !

Date:

வியட்நாமில் உள்ள அகதிகள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நேற்று இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300இற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக நாட்டில் இருந்து வெளியேறினர்.

இதற்கிடையே 20 குழந்தைகள், 19 பெண்கள் உள்பட 306 பேர் படகு மூலம் கனடா நாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பிலிப்பைன்சுக்கும், வியட்நாமுக்கு இடையே கடலில் சென்ற போது சூறாவளியில் படகு சிக்கி மூழ்கும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கையின் கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது.

இதையடுத்து சிங்கப்பூர் அதிகாரிகள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 317 இலங்கை அகதிகளை மீட்டு வியட்நாம் நாட்டுக்கு அழைத்து சென்றனர்.

கடலில் படகுகள் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். மீட்கப்பட்ட இலங்கை அகதிகள், வியட்நாமில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அகதிகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்று இலங்கை கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வியட்நாம் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது.

எனவே எங்களை அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...