சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய உள்ளூராட்சி சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை!

Date:

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை உறுப்பினர் சசி ஹெட்டியாராச்சி நடத்திய இந்த போராட்டத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தங்கள் கட்சி இராஜதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அரசாங்கம் சீனாவுடனான கடன் விவகாரங்களை இராஜதந்திர உறவுகளின் மூலம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு என்பது நிதி அமைச்சரின் பிரச்சினையே தவிர பிரதேச சபை உறுப்பினரின் பிரச்சினை அல்ல என்றும் பிரதேச சபை உறுப்பினரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கட்சி விரைவில் தீர்மானிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைக்குமாறு சீனாவைக் கோரி கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சஷி ஹெட்டியாராச்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...