கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை: ஹிருணிகா பொலிஸாரால் கைது!

Date:

எதிர்கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அவரும் அவரது ஆதரவாளர்கள் குழுவும் பெண்களுக்கு எதிரான காவல்துறை வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து பேரணியாக சென்றனர்.

கொழும்பில் பொலிஸாரை போன்று உடையணிந்து வீதிநாடகம் மேற்கொண்ட இருவரை கறுவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஹிணிக்கா உள்ளிட்ட குறித்த பெண்கள் குழுவினர் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தம்மையும் கைது செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வீதிநாடகத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமர்ந்து அதில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் அமைதி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

AI தொழிநுட்பத்தால் சிறுவர்களுக்கு ஆபத்து: இலங்கை பொலிஸார் தீவிர எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக...

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி...

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து...