மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார் ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (20)  மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதே ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

மன்னார் நகருக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மன்னார் ஒல்லாந்து கோட்டையின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர், நெடுகுடா மீனவ கிராமத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மீனவ மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

நெடுகுடா மீனவ கிராம மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததாகவும், அது தொடர்பில் துரிதமாக ஆராய்ந்து தேவையான தீர்வுகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் காற்றாலை மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரதேசத்தையும் ஜனாதிபதி அவதானித்ததுடன், காற்றாலை மின் நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அவதானித்ததுடன், அனல்மின் நிலைய பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...