டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, 49 வயதுடைய பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை சரணடைந்தார்.
குறித்த பெண் இன்று காலை சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரை சனிக்கிழமை கைது செய்ததுடன், பிரதான சந்தேக நபரின் 45 வயதான உள்ளூர் முகவர் (தரகர்) ஒருவரும் அண்மையில் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சுற்றுலா விசா மூலம் ஓமான் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக தொழிலுக்குச் அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த சில பெண்களும் ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.