புடவையை மாற்ற முயற்சிக்கு ஆசிரியர்களுக்கு அரசாங்கம் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை!

Date:

புடவை அல்லது ஒசரி அல்லாத வேறு  ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது பாடசாலைச் சூழல் என்பது மாணவர்களின் எதிர்காலத்தில் தொடர்புபட்டுள்ளது அதனால் ஆசிரியர்கள் புடவையிலோ அல்லது ஒசரி புடவையிலே பாடசலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்

மேலும் சட்ட விதிகளுக்கும் கலாசாரத்துக்கு ஏற்றவகையில் பாடசாலை காணப்பட வேண்டும், இதற்கு முரானான கருத்துக்களை வெளியிடும் அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படும் அங்கத்தவர்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு அரசாங்கம் ஒருபோது இடமளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் உடையை மாற்றும் முயற்சி தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷவும் கருத்து வெளியிட்டார்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...