சீனாவில் ஒரே நாளில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 28,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 29,157 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 26,438 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,93,506 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...