செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அடுத்த வருடம் முதல் பாடசாலையின் முதலாம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இன்று (25) பாராளுமன்ற பணிகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இருந்து கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பமாகும் என தெரிவித்த அமைச்சர், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13000 பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் பிற நிறுவனங்கள் உதவி செய்து வருவதாகவும், தேவையான வேலை புத்தகம் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆரம்பக்கட்டத்திற்கான வேலைத்திட்டமும் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.