வசந்த முதலிகே பல்கலைக்கழக மாணவர் அல்ல – ஜனாதிபதி

Date:

எந்தவொரு பல்கலைக்கழக மாணவர்களும் தடுத்து வைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ஒரு பல்கலைக்கழக மாணவர் கூட தடுத்து வைக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வசந்த முதலிகே 8 மற்றும் 9 ஆண்டுகள் பல்கலைக்கழக மாணவராக இருந்தார். இது மிகவும் முக்கியம். நான் 21 வயதில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினேன்.

வசந்த முதலிகேக்கு 31 வயதாகியும் அவர் இன்னும் பல்கலைக்கழக மாணவரே. ஒரு மாணவருக்கு ஒரு வருடத்திற்கு மேல் மட்டுமே கொடுக்க முடியும். அதன் பிறகு அவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...