இலங்கை புளிப்பு வாழைப்பழங்கள் முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி!

Date:

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள முதலாவது புளிப்பு வாழைப்பழம் நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்படும் புளிப்பு வாழை முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வொக்ஸ்ஹால் வீதியிலுள்ள Development Interplan Ceylon PVT LTD இல் இன்று (25)   வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எமது நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையின் பெயரை சர்வதேசப் புகழுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என அமரவீர தெரிவித்தார். .

“நம் நாட்டில் எல்லாவற்றையும் விமர்சிப்பவர்கள் இருக்கும் இவ்வேளையில், சொந்த நாட்டு மண்ணில் விளைந்த புளிப்பு வாழையை இன்று சர்வதேச சந்தைக்கு அனுப்புவது எமக்குக் கிடைத்த வெற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தொகுதியாக 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமை துபாய் சந்தைக்கு இலங்கை புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாரத்திற்கு 10,000 டொலர் வருமானத்தை நாட்டுக்கு வழங்கியுள்ளது” என விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...