கிரேன்பாஸ் சமகிபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இரண்டு வயது ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, ஆனால் குழந்தையின் தாயின் மூத்த சகோதரரே அவரை கட்டிடத்திலிருந்து கீழே வீசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.