2022 சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான பொதுத் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று (நவ.27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இவ்வருட மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகளில் ஒட்டுமொத்தமாக 74 வீதம் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கல்விப் பொதுத் தராதர விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இந்திய கடன் திட்டத்தின் கீழ் தனியார் துறையினரின் ஆதரவுடன் அதனை முறையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...