1947 ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனத்தில் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அநீதியான தீர்மானத்தை நினைவு கூறும் வகையில் வருடா வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பலஸ்தீன ஆதரவு தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இலங்கை பலஸ்தீன ஆதரவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பலஸ்தீனுக்கான ஆதரவு தெரிவிக்கும் மாநாடு இன்று நடைபெற்றது.
இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், இலங்கையின் பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லஹ் ஸைட் , பலஸ்தீன் இலங்கை ஒருமைப்பாட்டு குழு தலைவர் விமல் ரத்நாயக்க,குழு உறுப்பினர் அமீர் இஸ்ஸதீன் உற்பட பாராளுமன்ற உறுப்பினர், புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டின் முக்கிய காட்சிகள்