ஜனாதிபதி ரணிலின் சட்டத்தரணி வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தி : ஷாங்க்ரி-லா ஹோட்டலில் 1000 பேருக்கு பார்ட்டி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி செய்ததை முன்னிட்டு, நாட்டின் சட்ட வல்லுநர்கள் ஏற்பாடு செய்த விசேட கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையின் அரசியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் உரையாற்றியதுடன், ஜனாதிபதியின் சட்டத்தரணி  ரொனால்ட் பெரேரா வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.

சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல அரசியல்வாதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...