அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நாளை (5) ஆரம்பமாகவுள்ளது.
மூன்றாம் தவணை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்றாம் தவணையின் மத்தியில் கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரம்-2023 பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இதற்காக ஜனவரி மாதம் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.