‘இலங்கை வரும் பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனைகள் இல்லை’

Date:

வெளிநாட்டிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு நடைமுறையில் இருந்த COVID 19 தொற்று நோய்களின் கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் எந்தவொரு நபரும் COVID 19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், எந்தவொரு விமான நிலையம் அல்லது  துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழையும் எந்தவொரு நபரும்  பிசிஆர், ஆன்டிஜென் பரிசோதனைகளை  மேற்கொள்ள அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் கூறினார்.

வெளிநாட்டினர் அல்லது சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தரையிறங்கிய பின்னர்  கொவிட் தொற்று இருந்தால், அவர்கள் ஏழு நாட்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்துதலுக்கான செலவை வெளிநாட்டினர் ஏற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...