எதிரி நாட்டு திரைப்படங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த வட கொரியா!

Date:

வடகொரியாவில் தென் கொரியாவின் நாடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி தென் கொரிய நாட்டின் நாடகங்களை பார்த்த 2 பள்ளிக்கூட சிறுவர்களுக்கு பொதுவெளியில் வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

உலகின் மிகவும் மர்ம தேசமாக இருக்கும் நாடு வடகொரியா தான். அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றியோ அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றியோ வெளி உலகத்திற்கும் எதுவும் நிச்சயமாக தெரியாது.

இந்நிலையில்வட கொரியாவில், கே-நாடகங்கள்(K-Dramas) என்று பிரபலமாக அறியப்பாடும் தென் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகம் செய்வது மரண தண்டனை விதிக்குமளவுக்கு பெரிய குற்றமாகும்.

அணு ஆயுத ஏவுகணை சோதனை மூலம் அடிக்கடி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி கவனம் ஈர்க்கும் நாடு வட கொரியா.

குறிப்பாக அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு வட கொரியா பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இந்த நிலையில், தென் கொரிய, அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக 2 சிறுவர்களுக்கு வட கொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியிருக்கிறது.

இப்படியிருக்க தற்போது வெளியான தகவலின்படி, கடந்த அக்டோபர் மாதம் வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்திலுள்ள ஒரு பள்ளியில் சந்தித்துக்கொண்ட 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், பல தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடக நிகழ்ச்சிகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதமே அந்த சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஹைசனில் உள்ள ஒரு விமானநிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆனபிறகும் இப்போதுதான் அதுபற்றிய தகவல் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...