திருமண வைபவத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி: 50 பேர் படுகாயம்!

Date:

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்ச்சியின் போது இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு சுமார் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள புங்ரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்திற்காக உணவு தயார் செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவால் இந்த பெரும் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது 12 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல் அமைச்சர் இன்று மாலை மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...