‘நன்றி போர்ச்சுகல், நன்றி கத்தார், என் கனவு முடிவுக்கு வந்தது” :ரொனால்டோ உருக்கமான பதிவு!

Date:

‘நன்றி போர்ச்சுகல் என் கனவு முடிவுக்கு வந்தது என கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

காலிறுதிப்போட்டிகள் நிறைவடைந்து பிரான்ஸ், அர்ஜெண்டினா, மொராக்கோ, குரோஷியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

டிசம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் போர்ச்சுகல் – மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் மொராக்கோ வீரர் யூசுப் நெசிரி, தலையால் பந்தை முட்டி, கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அணியை அரையிறுதி சுற்றுக்கு கொண்டு சென்றார். போர்ச்சுகல் அணி கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.

இந்த தோல்வி காரணமாக போர்சுகலைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவும் தகர்ந்தது.

37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவே தனது கடைசி உலகக் கோப்பை என்றார்.

காலிறுதியில் தோற்ற உடன் கண்ணீர்விட்டு அழுது மைதானத்தில் இருந்து வெளியேறினார் ரொனால்டோ.

இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு உருக்கமான பிரியாவிடை பதிவு ஒன்றை இன்ஸ்டாகிரம் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘போர்ச்சுக்கல் நாட்டிற்கு உச்சபட்ச கௌரவத்தை தரும் விதமாக உலகக் கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவு.

இந்த கனவை நனவாக்க நான் கடுமையாக போராடினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக என்னுடைய கனவு முடிவுக்கு வந்தது. போர்ச்சுகல் அணி மீது நான் வைத்திருந்த அர்ப்பணிப்பு உணர்வு ஒரு கணமும் மாறவில்லை என்பது நீங்கள் அறிந்த ஒன்றே.

கடந்த 16 ஆண்டுகளில் 5 முறை உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடியுள்ளேன். என்னுடன் எப்போதும் சிறந்த வீரர்கள் உடன் விளையடினர். இலட்சக் கணக்கான போர்ச்சுகீசிய மக்கள் ஆதரவு தந்தனர். நானும் எனது முழுமையான பங்களிப்பை கொடுத்தேன்.

அனைவரின் நோக்கத்திற்காகவும் போராடும் ஒரு வீரனாக எப்போதும் இருக்கிறேன்.  சக வீரர்கள் மற்றும் என் நாட்டுக்காக நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

மற்றவற்றை பிறரின் முடிவுகளுக்கே விட்டுவிடுகிறேன். இப்போதைக்கு இதற்கு மேல் நான் ஏதும் பேச விரும்பவில்லை. நன்றி போர்ச்சுகல். நன்றி கத்தார். இந்த கனவு உயிர்ப்புடன் இருந்த வரை அழகாக இருந்தது’. இவ்வாறு ரொனால்டோ தனது பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...