4 வயது சிறுவனை நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

Date:

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...