பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Date:

கல்வியாண்டு 2021, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் இன்று(19) அறிவிக்கப்படவுள்ளது.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்ததும், மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவு மற்றும் பல்கலைக்கழகத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவுகளை நிறைவு செய்ய முடியும் என்றும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏதேனும் வெற்றிடங்கள் ஏற்பட்டால் பல்கலைக்கழக நுழைவுக்கான முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என்று பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டார்.

2021, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் டிசம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...