மின் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம்: ரஞ்சித் மத்தும பண்டார!

Date:

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும், வருடத்தின் நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலையேற்றங்கள் அனைத்தும் மிகவும் அநியாயம் மற்றும் அநீதியானது என்பதால், மக்களுடன் இணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின்கட்டணத்தினை அதிகரித்து இலாபம் ஈட்டும் மின்சார சபை மீண்டும் பழைய நஷ்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் கட்டணத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...