‘உலக கோப்பையை இழந்தாலும் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்’ பிரான்ஸ் அதிபர்

Date:

எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேரில் கண்டு ரசித்தார்.

தனது நாட்டு அணி கோல்கள் அடித்த போது உற்சாகமாக குரல் எழுப்பி அவர் ஆதரவு தெரிவித்தார்.

போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கும், அதன் வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இறுதி ஆட்டத்தில் தோற்றதால் நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம், மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக எம்பாப்பே உள்பட தோல்வியால் துவண்டிருந்த பிரான்ஸ் வீரர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

இறுதி போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த எம்பாப்பேவின் ஆட்டம் அசாதாரணமானது என்றும், 24 வயதான அவர், ஏற்கனவே இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் என்றும் மேக்ரான் தெரிவித்தார்.

இந்நிலையில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த பிரான்ஸ் வீரர்கள் இன்று கத்தாரில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

உலக கோப்பையை பெறும் வாய்ப்பை இழந்த போதிலும் பாரீசில் பிரான்ஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மேக்ரான் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...